Friday, 17 June 2011

மரபெட்டியின்

அவளின் அந்தரங்க விம்மலை
என்னுள் மறைத்திருந்தேன்..
அவளுடைய அழுகைக்கண்ணீர்
பலமுறை என்னை முழுதாய்
நனைத்தும் உண்டு..
தன்னை மறந்து தூங்கும் வரை
அணைதப்படியே
பொறுமையாய் கதைகளை
கேட்டும் இருக்கின்றேன்..
இப்போதெல்லாம்
என்ன கோவமோ தெரியவில்லை..
உணர்ச்சியில்லா ஓர் தூக்கம்..
அவள் உறக்கம் கலையாமல்
புதிதாய் நெளியும்
நுண்ணுயிர்களையும்
சேர்த்து மறைத்து வைத்து
இருக்கின்றேன்.
யாருக்கும் தெரியாமல்..

ஓர் நீள மரபெட்டியின் மௌனக்கதறல்....

2 comments:

  1. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete